/உள்ளூர் செய்திகள்/சென்னை/கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலிகழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி
கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி
கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி
கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி
ADDED : ஜன 11, 2024 01:04 AM

செங்குன்றம், செங்குன்றம் அடுத்த சுப்ரமணிய பாரதி தெருவைச் சேர்ந்தவர் வித்யா, 29. இவருக்கு, கிருஷ்ணப்பிரியன், 10, ஹேம்நாத், 8, என இரு மகன்கள் உள்ளனர்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த வித்யா, குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ஹேம்நாத், அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5:30 மணி அளவில், அண்ணன் கிருஷ்ணப்பிரியன் மற்றும் நண்பர்களுடன் ஹேம்நாத், வீட்டருகே உள்ள வீரமாமுனிவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, அங்கிருந்த கழிவு நீர் தொட்டியின் மீது உறுதியற்ற மரப்பலகையும், அதன் மீது கோணியும் போடப்பட்டிருந்ததை கவனிக்காமல், அதன் மீது நின்ற ஹேம்நாத், பலகை உடைந்து உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.
செங்குன்றம் போலீசார், தீயணைப்பு துறையினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது.