/உள்ளூர் செய்திகள்/சென்னை/புளு ஸ்கை கிரிக்கெட் யுனிகார்ன் அணி அசத்தல்புளு ஸ்கை கிரிக்கெட் யுனிகார்ன் அணி அசத்தல்
புளு ஸ்கை கிரிக்கெட் யுனிகார்ன் அணி அசத்தல்
புளு ஸ்கை கிரிக்கெட் யுனிகார்ன் அணி அசத்தல்
புளு ஸ்கை கிரிக்கெட் யுனிகார்ன் அணி அசத்தல்
ADDED : பிப் 12, 2024 02:14 AM
சென்னை:சென்னையில் இயங்கி வரும் 'புளு ஸ்கை கிரிக்கெட் அகாடமி' சார்பில், 20 ஓவர் கிரிக்கெட் 'லீக்' போட்டிகள், நகரின் பல இடங்களில் நடந்து வருகின்றன. இதில், ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதிக வெற்றிகளை பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, நேற்று காலை 7:00 மணிக்கு நடந்த 'லீக்' போட்டியில், ஹரிஹந்த் பார்மா அணியை எதிர்த்து யுனிகார்ன் அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற ஹரிஹந்த் அணி, முதலில் களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், ஒன்பது விக்கெட் இழந்து, 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுயாஷ் 31 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய யுனிகார்ன் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரீராம், அஸ்வக் இருவரும், எதிரணி பந்துகளை துவம்சம் செய்து, புயல் வேகத்தில் ரன்களை குவித்தனர்.
இதனால், யுனிகார்ன் அணி, 16 ஓவர் முடிவில், 132 ரன்கள் எடுத்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரீராம் 46 ரன்கள் குவித்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காத அஸ்வக், 33 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.