Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

UPDATED : செப் 15, 2025 05:34 PMADDED : செப் 14, 2025 01:08 AM

Google News
Latest Tamil News
சென்னை: 'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் வேலம்மாள் 'நியூஜென் கிட்ஸ்' இணைந்து வழங்கும், 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற, குழந்தைகளின் கண் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆர்வமுள்ள பெற்றோர் விறுவிறுப்பாக, முன்பதிவு செய்ய துவங்கி உள்ளனர்.

வித்யாரம்பம் நெல் மணியில், குழந்தையின் கையால் அகரம் எழுதி, வித்யாரம்பம் செய்வது, விஜயதசமி நன்னாளில்தான். அந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில், கல்வியாளர்கள், பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தை களின், 'அ'கரத்தை துவக்கி வைக்க உள்ளனர்.

நடக்கும் இடம் சென்னை, படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், வடபழனி ஆண்டவர் கோவில், கேளம்பாக்கம் வேலம்மாள் நியூ ஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சூரப்பேட்டை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் ஆகிய, ஐந்து இடங்களில், அக்., 2ம் தேதி, காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இதில், இரண்டரை வயது முதல், மூன்றரை வயது உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் துவக்கலாம்.

இதற்கான முன்பதிவு தற்போது துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்பதிவு செய்ய, இச்செய்தியில் உள்ள கியூ.ஆர்., குறியீடை 'ஸ்கேன்' செய்து, அதில், உங்களுக்கு அருகில் உள்ள பகுதியை தேர்வு செய்து, குழந்தை குறித்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதில், பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள டி - ஷர்டுடன், 'லேர்னிங் கிட்' மற்றும் குழந்தை அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விபரங் களுக்கு, 81229 71772, 81483 01771 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியின் சேனல் பார்ட்னர், 'ஜனம்' தொலைக்காட்சி.

குறிப்பு: கீழ்காணும் லிங்கில் இலவசமாக முன்பதிவு செய்யுங்கள்

      Our Apps Available On

      Dinamalar

      Follow us