/உள்ளூர் செய்திகள்/சென்னை/முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்

வடபழனி ஆண்டவர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து, மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கந்தக்கோட்டம்
பிராட்வே அடுத்த பூங்கா நகர் கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவிலில் மூலவர் கந்தசுவாமி, உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.
திருத்தணி
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சந்தனக்காப்பு, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
வல்லக்கோட்டை
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், வள்ளிதேவிக்கு பச்சை குங்கும அலங்காரம், தெய்வானைக்கு சிவப்பு குங்கும அலங்காரத்திலும், உற்சவருக்கு 'ஓம்' எனும் பிரணவ மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.


