ADDED : பிப் 12, 2024 02:04 AM

காசிமேடு:காசிமேடு மீன்பிடித்துறைமுகம் அருகே, சென்னை துறைமுகம் செல்லக்கூடிய மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ், பழுதடைந்த சில பைபர் படகுகளும், குப்பையும் கொட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று காலை குப்பை கழிவுகள் பற்றி எரிந்து, கரும்புகை கிளம்பியது. வானளவு உயர்ந்த புகையால் பீதியடைந்த மீனவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த, ராயபுரம், தண்டையார்பேட்டை, எஸ்பிளனேடு தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
வானுயர எழும்பிய கரும்புகையால், சென்னை துறைமுகம் செல்லும் சாலையில், கன்டெய்னர் லாரி போக்குவரத்து சிரமமானது.
இது குறித்து, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.