/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 7 ஆண்டு சிறைசிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஜன 11, 2024 01:44 AM
சென்னை, சென்னையிலுள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியை, கடந்த 2017 டிச., 9ம் தேதி, வாலிபர் ஒருவர் தன் நண்பர்களுடன், காரில் கோவளம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, இளம் சிறார் உட்பட நான்கு பேர், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர்களான அகிலன், 25, சரத்குமார், 23, பள்ளிக்கரணையைச் சேர்ந்த மகேஷ், 32, மற்றும் இளம் சிறார் என நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இளம் சிறார் மீதான வழக்கு, சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மற்றவர்கள் மீதான வழக்கை, நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
அகிலனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், விடுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.