/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிங்கிள் காலம் ரூ.25,000த்துடன் டீ மாஸ்டர் தலைமறைவுசிங்கிள் காலம் ரூ.25,000த்துடன் டீ மாஸ்டர் தலைமறைவு
சிங்கிள் காலம் ரூ.25,000த்துடன் டீ மாஸ்டர் தலைமறைவு
சிங்கிள் காலம் ரூ.25,000த்துடன் டீ மாஸ்டர் தலைமறைவு
சிங்கிள் காலம் ரூ.25,000த்துடன் டீ மாஸ்டர் தலைமறைவு
ADDED : மே 22, 2025 12:37 AM
புளியந்தோப்பு,வியாசர்பாடி, பி.பி.சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன், 30. இவர், டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லுாரி அருகே டீக்கடை வைத்துள்ளார். இங்கு, டீ மாஸ்டராக ராயப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ், 50, என்பவர் பணிபுரிந்தார். இவர், கடையை திறப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் காலை 5:00 மணியளவில், ஸ்டீபன் கடைக்கு வந்தபோது கடை திறக்கப்படவில்லை. தன்னிடம் உள்ள சாவியை வைத்து ஸ்டீபன் கடையை திறந்துள்ளார். அப்போது, கல்லா பெட்டியில் வைத்திருந்த 25,000 ரூபாய் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.
இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதிகாலை 2:00 மணியளவில் ஷட்டரை திறந்த சதீஷ், கல்லா பெட்டியில் இருந்த பணம் மற்றும் மொபைல் போனை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. சதீைஷ போலீசார் தேடி வருகின்றனர்.