/உள்ளூர் செய்திகள்/சென்னை/சர்வதேச செஸ் போட்டி தமிழக வீரர் முன்னிலைசர்வதேச செஸ் போட்டி தமிழக வீரர் முன்னிலை
சர்வதேச செஸ் போட்டி தமிழக வீரர் முன்னிலை
சர்வதேச செஸ் போட்டி தமிழக வீரர் முன்னிலை
சர்வதேச செஸ் போட்டி தமிழக வீரர் முன்னிலை
ADDED : ஜன 03, 2024 12:18 AM

சென்னை அகில இந்திய சதுரங்க சங்கம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க கழகம் ஆதரவுடன், சக்தி குரூப் ஆப் கம்பெனி சார்பில், மகாலிங்கம் கோப்பைக்கான, 14வது சர்வதேச செஸ் போட்டி, சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் விடுதி அரங்கில், டிச., 31ல் துவங்கியது.
இப்போட்டியில், சர்வதேச வீரர்கள், கிராண்ட் மாஸ்டர்கள், உள்ளூர் வீரர்கள் என, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 10 சுற்றுகள் என, சுவிஸ் அடிப்படையில், ஜன., 7 வரை போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் என, 60க்கும் மேற்பட்டோருக்கு, மொத்தம் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
இதில், நேற்று மதியம் 1:00 மணி வரை நான்காவது சுற்று முடிவில், தமிழகத்தின் சர்வதேச வீரர் சரவண கிருஷ்ணன், 4 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
தவிர, பெலாரஸ் வீரர் பெடோரோவ் அலெக்ஸி, பெல்ஜியம் வீரர் கிளெக் இகோர், தஜிகிஸ்தான் வீரர் குசென்கோஜேவ் முஹம்மது, ஸ்லோவாக்கிய வீரர் மானிக் மிகுலாஸ் மற்றும் வியட்நாம் வீரர் நுயென் டக் ஹோவா ஆகியோரும், தலா நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.