ஆன்மிகம்
சேவாகாலம்: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், பார்த்தசாரதி பெருமாள் மண்டப திருமஞ்சனம் - காலை 9:00 மணி. திருமழிசையாழ்வார் சேவாகாலம் - மாலை 4:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.பவுர்ணமி
கிரிவலம்: அவுடசித்தர் மலை கிரிவலம் புறப்பாடு - மாலை, 6:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி.
வீராத்தம்மன் கோவில்: சிறப்பு அலங்கார ஆராதனை - காலை, 6:00 மணி. சிறப்பு அன்னதானம் - முற்பகல், 11:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
சாங்கு சித்தர் ஜீவசமாதி: சிவலிங்க நாயனாருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார ஆராதனை - காலை. அன்னதானம் - பகல், 12:00 மணி. இடம்: எம்.கே.என்., ரோடு, மாங்குளம் அருகில், கிண்டி.
சிறப்பு வழிபாடு: வீரபிரமாங்கார் சுவாமி, விராட் விஸ்வப்பிரம்மம், காயத்ரி தேவிக்கு சிறப்பு பூஜை. காலை 9:00 மணி. இடம்: காளிகாம்பாள் கோவில், தம்பு செட்டி தெரு, பிராட்வே.
சாய்பாபா கோவில்: பாபாவுக்கு பாலாபிேஷகம், புஷ்பாஞ்சலி, ஊஞ்சல் சேவை - முற்பகல், 11:00 மணி. 18 சித்தர்கள் பூஜை - மாலை, 5:00 மணி. இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மைய அறக்கட்டளை, 18, கணபதி நகர், பள்ளிக்கரணை.
கலை விழா
திருமலை - திருப்பதி கோவில்: பாட்டு: குமாரி நாகதிஷ்யா - மாலை, 6:30. இடம்: தி.தி.தே., தகவல் மையம், வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்.
தியாக பிரம்ம கான சபா: பரதநாட்டியம்: அனுஷ்யா ஹரிகரன் - மாலை, 5:00. மணி. அபர்ணா கண்ணன் - இரவு, 7:00 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர்.
பிரம்ம கான சபா: பரதநாட்டியம்: சுஹானி தன்கி மோடி, சாந்தி மொகன்டி தேவி- மாலை, 5:00 மணி. கவிதா ராமு - மாலை, 6:15 மணி. 'தையலர் மூவர் - ராதை, சீதை, கோதை' -பிரியா முரளி - இரவு, 7:30 மணி. இடம்: பி.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியம், ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர்.
தைப்பூசம் விழா
கபாலீஸ்வரர் கோவில்: கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் தெப்ப உற்சவம் - இரவு 7:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில் குளம், மயிலாப்பூர்.
திருவேட்டீஸ்வரர் கோவில்: 1008 தமிழ் அர்ச்சனைபோற்றி, தேவார திருமுறை இன்னிசை - மாலை, 6:00 மணி. திருவேட்டீஸ்வரர் சுவாமி தெப்பத்தில் பவனி - இரவு, 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்: சுவாமி - அம்பாள் தெப்பத்தில் பவனி. இரவு, 7:30 மணி. இடம்: அரசன்கழனி.
ஒட்டீஸ்வரர் கோவில்: சிவசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்கார ஆராதனை - காலை, 9:00 மணி. ஒட்டீஸ்வரருக்கு அபிேஷக அலங்காரம் - காலை, 10:00 மணி. இடம்: ஒட்டியம்பாக்கம்.
காத்யாயனி அம்பாள் கோவில்: அத்தி விருட்ச மஹாலட்சுமி சிறப்பு தரிசனம், குபேர வழிபாடு - காலை முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: குன்றத்துார்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்: வாசனை திரவிய சிறப்பு அபிேஷகம் - காலை, 5:00 மணி. நாணயம், பண அலங்காரம் - காலை, 8:00 மணி. அலகு குத்துதல் - காலை, 9:00 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
நித்ய தீப தர்மசாலை: கூட்டு பிரார்த்தனை, அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு. பசியாற்றுவித்தல் - காலை 8:00 மணி முதல். இடம்: ஏரிக்கரை தெரு, வேளச்சேரி.
சமரச சுத்த சன்மார்க்க டிரஸ்ட்: கொடியேற்றம், திருவடிப் புகழ்ச்சி, அகவல் பாராயணம் - காலை, 8:00 மணி முதல். ஜோதி தரிசனம், பசியாற்றுவித்தல் - பகல், 12:00 மணி. இடம்: கலவை தெரு, சிந்தாதிரிப்பேட்டை.
சிவ விஷ்ணு கோவில்: முருகப் பெருமானுக்கு சமஷ்டி அபிேஷகம். காலை 8:30 மணி. இடம்: உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை.
குமரன்குன்றம்: பால் குடங்கள், காவடிகள் புறப்பாடு, சுவாமிக்கு பால் அபிேஷகம், சிறப்பு அலங்கார ஆராதனை, தரிசனம். காலை 7:00 மணி முதல் இரவு வரை. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில்,குரோம்பேட்டை.
பொது
புத்தக மதிப்புரை: தமிழவன் தொகுத்த 'பின் நவீனத்துவத் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் பன்முகங்கள்' நுால் பற்றி உரை: வீ.அரசு, மாலை, 6:00 மணி. இடம்: சாகித்ய அகடமி, குணா வளாகம், 2வது தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை.
இலவச பிராண சிகிச்சை முகாம்: பவுர்ணமி தியானம், பிராண சிகிச்சை. உடல், எண்ணம் மனரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் ஆன்மிக சிகிச்சை முறை. மாலை, 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பிளாக்: 2, எண்: 2110, ராஜ் பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம். தொடர்புக்கு: 98844 52258.
ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.
கண்காட்சி
தீவுத்திடல்: சுற்றுலா பொருட்காட்சி. முற்பகல் முதல் இரவு வரை. இடம்: சென்னை.
ரயில்வே மைதானம்: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. பிற்பகல், 3:00 முதல் இரவு, 10:00 மணி வரை. இடம்: தாம்பரம்.
ஐ.சி.எப்.: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்ப கண்காட்சி நேரம்: காலை முதல் மாலை வரை. இடம்: ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.
ஆன்மிக பொருட்கள் கண்காட்சி: சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா 'ஏசி' ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.