/உள்ளூர் செய்திகள்/சென்னை/போதிய தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன: மாநகராட்சிபோதிய தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன: மாநகராட்சி
போதிய தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன: மாநகராட்சி
போதிய தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன: மாநகராட்சி
போதிய தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன: மாநகராட்சி
ADDED : ஜன 28, 2024 12:10 AM
சென்னை, சென்னை. புறநகர் பகுதிகளில், 'மிக்ஜாம்' புயலுக்கு பின், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கிடைப்பதில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இதனால், மாநகராட்சிக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள், அங்கன்வாடி மையங்களில் நடக்கும் தடுப்பூசி முகாம்களில் மட்டுமே போட முடிகிறது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதற்கு, மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
மாநகராட்சி வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கான தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன.
அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதுமான அளவில், தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. எவ்வித குறைபாடுகளுமின்றி தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள், மருந்து தட்டுப்பாடு ஏதுமின்றி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.