சென்னையில் மாநகர பஸ்சில் திடீர் தீ
சென்னையில் மாநகர பஸ்சில் திடீர் தீ
சென்னையில் மாநகர பஸ்சில் திடீர் தீ
UPDATED : ஜூலை 02, 2024 04:04 PM
ADDED : ஜூலை 02, 2024 04:01 PM
சென்னை: சென்னை அடையாறு பணிமனை அருகே மாநகர பஸ்சில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் வரை செல்லும் 109 சி என்ற எண் கொண்ட புதிய குளிர்சாதன பஸ்சில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புகை வந்ததும், பஸ்சில் இருந்த பயணிகள் வெளியேறியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.