ADDED : ஜன 28, 2024 12:50 AM
சென்னை, ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, திரு.வி.க., சாலை - பட்டூல்லாஸ் சாலை வரையிலான ஒயிட்ஸ் சாலை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.
ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து சத்தியம் திரையரங்கம் செல்வோர், பட்டூல்லாஸ் சாலை வழியாக சென்று, அண்ணா சாலை, திரு.வி.க., சாலை வழியாக செல்லலாம்.
ஆயிரம் விளக்கு அண்ணா சாலையிலிருந்து சத்தியம் திரையரங்கம் வரும் வாகனங்கள் வழக்கம் போல், திரு.வி.க., சாலை - ஒயிட்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றம், வரும் 31ல் இருந்து அமல்படுத்துவதாக கூறிய நிலையில், இன்று முதல், திடீரென மாற்றப்பட்டு உள்ளது.