/உள்ளூர் செய்திகள்/சென்னை/இறந்தவர் தலை கிடைக்காததால் அடையாளம் தெரியாமல் திணறல்இறந்தவர் தலை கிடைக்காததால் அடையாளம் தெரியாமல் திணறல்
இறந்தவர் தலை கிடைக்காததால் அடையாளம் தெரியாமல் திணறல்
இறந்தவர் தலை கிடைக்காததால் அடையாளம் தெரியாமல் திணறல்
இறந்தவர் தலை கிடைக்காததால் அடையாளம் தெரியாமல் திணறல்
ADDED : ஜன 08, 2024 01:47 AM
குன்றத்துார்:செம்பரம்பாக்கம் ஏரியில் கொலை செய்யப்பட்டு முண்டமாக கிடந்தவரின் தலை கிடைக்காததால், அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் முண்டமாக ஏரியில் மிதப்பதாக, குன்றத்துார் போலீசாருக்கு, கடந்த 30ம் தேதி தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடல் மற்றும் ஏரி கரையோரம் இருந்த இரு காலை மீட்டனர். அதன் பின், அவரது தலை மற்றும் இரண்டு கைகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான காணாமல் போனவர்கள் பட்டியலை சேகரித்தும், கொலையானவரின் அடையாளம் கிடைக்கவில்லை. இதனால், கொலையானவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.