/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின்வெட்டு பிரச்னை மாணவர்கள் கடும் அவதிமின்வெட்டு பிரச்னை மாணவர்கள் கடும் அவதி
மின்வெட்டு பிரச்னை மாணவர்கள் கடும் அவதி
மின்வெட்டு பிரச்னை மாணவர்கள் கடும் அவதி
மின்வெட்டு பிரச்னை மாணவர்கள் கடும் அவதி
ADDED : பிப் 24, 2024 12:18 AM
மணலி, மணலியில் ஹரிகிருஷ்ணபுரம், சாலைமா நகர் உள்ளிட்ட சில பகுதிகள், நிர்வாக வசதிக்காக மணலிபுதுநகர் உதவி பொறியாளர் அலுவலகம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால், மின் பிரச்னைகளுக்கு, 'யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்' என தெரியாமல், மணலி பகுதிவாசிகள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு மணலி, ஹரிகிருஷ்ணபுரம், சாலைமா நகரில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதற்கு காரணம், ஹரிகிருஷ்ணபுரம் பகுதியில், மழைநீர் வடிகால் தோண்டும் பணியின்போது மின் ஒயர் துண்டிக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக சரிசெய்ய முடியமா என தெரியவில்லை.
இதற்கிடையில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் படிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும், குழந்தைகள், முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மின் பிரச்னையை எளிதில் கையாளும் வகையில், மணலி மின்சேவைகள் முழுதும், மணலி உதவிப் பொறியாளர் அலுவலகம் வசம் ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.