/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசுப்புழு மாணவர்களிடம் காட்டி விளக்கம் டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசுப்புழு மாணவர்களிடம் காட்டி விளக்கம்
டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசுப்புழு மாணவர்களிடம் காட்டி விளக்கம்
டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசுப்புழு மாணவர்களிடம் காட்டி விளக்கம்
டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசுப்புழு மாணவர்களிடம் காட்டி விளக்கம்
ADDED : ஜூன் 17, 2025 12:45 AM

அடையாறு, அடையாறு மண்டலத்தில், பகிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு, ஏரிகளில் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. சில பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதனால், அப்பகுதியில் விழிப்புணர்வை அதிகரிக்க, சுகாதாரத்துறை முடிவு செய்தது.
இதற்காக, பள்ளிகளில் மாணவ - மாணவியரிடம் டெங்கு, மலேரியா பரப்பும் கொசுப்புழு எப்படி உருவாகும் என, புழுக்களை காட்டி விளக்கினர்.
இதனால், தண்ணீரை திறந்த வெளியில் அதிக நாட்கள் தேக்கி வைத்திருக்கக்கூடாது, கழிவுநீர் தேங்காமல் சுற்றுவட்டார பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, அடையாறு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதை பெற்றோரிடம் தெரிவிக்கவும் மாணவ - மாணவியருக்கு வலியுறுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக, டெங்கு, மலேரியா பரவுவதை தடுக்க முடியும் என, அதிகாரிகள் நம்புகின்றனர்.