குடிநீர் லாரி மோதி மாணவர் படுகாயம்
குடிநீர் லாரி மோதி மாணவர் படுகாயம்
குடிநீர் லாரி மோதி மாணவர் படுகாயம்
ADDED : ஜன 05, 2024 12:57 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த லாரன்ஸ். அவர் மகன், கார்த்திகேயன், 13; தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குடிநீர் வினியோகத்திற்காக வந்த லாரி, அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கார்த்திகேயன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து விசாரித்த திருவொற்றியூர் போலீசார், குடிநீர் லாரி ஓட்டுனரான திருவொற்றியூர், நந்தி ஓடை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 27, என்பவரை கைது செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.