ADDED : பிப் 24, 2024 12:16 AM
கூடுவாஞ்சேரி. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் சுபாஷ் சந்திர போஸ் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் டேனியல் மகன் மோசஸ் ஜோஸ்வா, 17. தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 மாணவர்.
நண்பர்களான தினேஷ்குமார், ஹரிஹரன், நித்யானந்தம், அஸ்வின், ஹரிஹரன், டென்ஸ்சன் ஆகிய ஆறு பேருடன் சேர்ந்து, ஊரப்பாக்கம் ராம் நகர் பகுதியில், உள்ள விவசாய கிணற்றில், மாலை 6:00 மணி அளவில் குளித்தார்.அப்போது, மோசஸ் ஜோஸ்வாவுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்று நீரில் மூழ்கினார்.
தகவலறிந்து வந்த மறைமலை நகர் தீயணைப்பு துறை, மீட்பு படையினர், கிணற்றில் இருந்து மோசஸ் சடலத்தை கைப்பற்றினர். கூடுவாஞ்சேரி மற்றும் கிளாம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.