/உள்ளூர் செய்திகள்/சென்னை/சோழிங்கநல்லுார் சந்திப்பில் நெரிசல் குறைக்க நடவடிக்கைசோழிங்கநல்லுார் சந்திப்பில் நெரிசல் குறைக்க நடவடிக்கை
சோழிங்கநல்லுார் சந்திப்பில் நெரிசல் குறைக்க நடவடிக்கை
சோழிங்கநல்லுார் சந்திப்பில் நெரிசல் குறைக்க நடவடிக்கை
சோழிங்கநல்லுார் சந்திப்பில் நெரிசல் குறைக்க நடவடிக்கை
ADDED : ஜன 28, 2024 12:16 AM
சென்னை, சென்னையின் முக்கிய ஆறுவழிச் சாலையாக, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. இங்கு, மெட்ரோ ரயில் பாதை பணி நடப்பதால், நான்கு வழியாக மாற்றப்பட்டது.
இதனால், போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. மேலும், சாலையில் ஏற்பட்ட பள்ளங்களும், நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
வாகன ஓட்டிகள் ஒவ்வொரு சிக்னலிலும், அதிக நேரம் காத்திருக்க வேண்டும். இதில், ஆம்புலன்ஸ் சிக்கினால், வழிவிட கூட இடம் இல்லாத அளவு நெரிசல் ஏற்பட்டது.
சோழிங்கநல்லுார் சந்திப்பில், 'யு டர்ன்' அமைத்தால், நெரிசலை குறைக்க முடியும் என, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார், மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர், அச்சாலையில் ஆய்வு நடத்தினர். அப்போது, சாலை பள்ளங்களை சீரமைத்தால் தான், சந்திப்புகளில் நெரிசல் குறையும் என, போலீசார் கூறினர்.
இதற்காக, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியதுடன், 'சாலையை சீரமைத்தால் தான் பணி செய்ய தடையின்மை சான்று வழங்கப்படும்' என்றனர்.
மேலும், போலீசார் கூறியதாவது:
சோழிங்கநல்லுார் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காரப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், சிக்னலில் திரும்பாமல், 100 அடி கடந்து 'யு டர்ன்' செய்து திரும்ப வேண்டும்.
அதேபோல், செம்மஞ்சேரியில் இருந்து, இ.சி.ஆர்., நோக்கி செல்லும் வாகனங்கள், சிக்னலில் இருந்து 100 அடி துாரம் சென்று யு டர்ன் செய்ய வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம், தற்போது அமல்படுத்தப்படாது. சாலை பள்ளங்களை சீரமைத்ததும் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.