/உள்ளூர் செய்திகள்/சென்னை/அதிநவீன டிஜிட்டல் டிக்கெட் கருவி எம்.டி.சி.,யில் விரைவில் அறிமுகம்அதிநவீன டிஜிட்டல் டிக்கெட் கருவி எம்.டி.சி.,யில் விரைவில் அறிமுகம்
அதிநவீன டிஜிட்டல் டிக்கெட் கருவி எம்.டி.சி.,யில் விரைவில் அறிமுகம்
அதிநவீன டிஜிட்டல் டிக்கெட் கருவி எம்.டி.சி.,யில் விரைவில் அறிமுகம்
அதிநவீன டிஜிட்டல் டிக்கெட் கருவி எம்.டி.சி.,யில் விரைவில் அறிமுகம்
ADDED : ஜன 26, 2024 12:50 AM

சென்னை, அரசு போக்குவரத்து கழகங்களில் பயணியருக்கு டிக்கெட் அளிக்கும் வகையில், பிரத்யேக கருவிகள் பல ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டன.
இந்த கருவி வாயிலாக, வழங்கப்பட்ட டிக்கெட் விபரங்கள், வசூல் தொகை போன்றவை உடனுக்குடன் பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு தெரியவரும்.
இந்த கருவிகள் பழுதடைந்ததால் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதிதாக அதிநவீன மின்னணு டிக்கெட் கருவியை கொள்முதல் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, புதிய வகை கையடக்க டிக்கெட் கருவிகள் பல்லவன் இல்லம், குரோம்பேட்டை பயிற்சி மையம், தாம்பரம் உள்ளிட்ட பணிமனைகளில் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
இந்த புதிய கருவி பயன்பாட்டிற்கு வரும்போது, 'டெபிட், கிரெடிட் கார்டு' வாயிலாகவும், தேசிய பொது இயக்க அட்டை வாயிலாகவும் கட்டணம் செலுத்தும் வசதியை பயணியர் பெற முடியும். முதல்கட்டமாக, மாநகர போக்குவரத்து கழகத்தில் அறிமுகம் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


