/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில கால்பந்து தேர்வு முகாம் வீராங்கனையருக்கு அழைப்பு மாநில கால்பந்து தேர்வு முகாம் வீராங்கனையருக்கு அழைப்பு
மாநில கால்பந்து தேர்வு முகாம் வீராங்கனையருக்கு அழைப்பு
மாநில கால்பந்து தேர்வு முகாம் வீராங்கனையருக்கு அழைப்பு
மாநில கால்பந்து தேர்வு முகாம் வீராங்கனையருக்கு அழைப்பு
ADDED : ஜூன் 12, 2025 12:10 AM
சென்னை, தமிழ்நாடு கால்பந்து அமைப்பு சார்பில், ஜூனியர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இந்த மாத கடைசியில் நடக்க உள்ளது. இதில், மாநிலத்தின் சிறந்த மகளிர் அணிகள் பங்கேற்க உள்ளன.
இதில் பங்கேற்கும் சென்னை மாவட்ட ஜூனியர் அணியின் வீராங்கனையருக்கான தேர்வு முகாம், வரும் 14ம் தேதி காலை 6:00 மணிக்கு, மாதவரம், சென்னை ஸ்ட்ரைக்கர் அகாடமியல் நடக்கிறது.
இதில், 2010 ஜன., 1 முதல் 2011 டிச., 31 வரை பிறந்த, அதாவது 15 வயதுக்கு உட்பட்ட மாணவியர் மட்டும் பங்கேற்கலாம். வீராங்கனையர், தங்கள் ஆதார் அட்டை மற்றும் இருப்பிடச் சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என, சென்னை கால்பந்து அமைப்பு அறிவித்துள்ளது.ருக்கிறது.