Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கொளத்துாரில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் பணிக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

கொளத்துாரில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் பணிக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

கொளத்துாரில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் பணிக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

கொளத்துாரில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் பணிக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

ADDED : மே 27, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
சென்னை :கொளத்துாரில் மூத்த குடிமகளுக்கான உறைவிடங்கள் அமைக்கும் பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த அவர், சாதனை மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாாரட்டினார்..

சென்னை - கொளத்துாரில், ஹிந்து அறநிலையத் துறை வாயிலாக, 8.88 கோடி ரூபாயில், மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்டப்பட உள்ளன.

இங்கு, வரவேற்பறை, குளியலறை, கழிப்பறை, தங்கும் அறைகள், உணவருந்தும் அறைகள், பல்நோக்கு அறை, சமயலறை, பார்வையாளர் அறை, நுாலகம், அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ மையம், சிறு பூங்கா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.

சென்னை கொளத்துார், ராஜாஜி நகரில் நடந்த நிகழ்ச்சியில், இத்திட்டங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோவிலின் ஓதுவார் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட, பார்வை திறனற்ற மாற்று திறனாளி பிரியவதனாவுக்கான பணிநியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர், 350 பேருக்கு தையல் இயந்திரங்கள், 131 பேருக்கு லேப்டாப், 100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளை முதல்வர் வழங்கினார்.

விளையாட்டு திடல்

ஜி.கே.எம்., காலனியில், சி.எம்.டி.ஏ., வாயிலாக, 2.89 கோடி ரூபாய் மதிப்பில், ஜெனரல் குமாரமங்கலம் குளத்தை ஆழப்படுத்தி, புதிதாக கரை, நடைபாதை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி மூலதன நிதி, 1.47 கோடி ரூபாய் செலவில் இறகுபந்தாட்ட திடல், யோகா மேடை, செயற்கை நீரருவி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்துடன் அங்குள்ள பூங்காவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைத்தார். கொளத்துார் தொகுதியில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற, 318 மாணவ, மாணவியருக்கு புத்தக பை, புத்தகங்கள், கல்வி உபகரணங்களை முதல்வர் வழங்கினார்.

பெரியார் நகரில் நடந்த நிகழ்ச்சியில், 150 மாற்று திறனாளிகளுக்கு, 1.47 கோடி ரூபாய் மதிப்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களையும் முதல்வர் வழங்கினார்.

கொளத்துார் மற்றும் மாதவரம் சுற்றுப்பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்படாமல் தடுப்பதற்காக, 91.3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாயை முதல்வர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us