/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம்
சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம்
சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம்
சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம்
ADDED : செப் 22, 2025 03:12 AM

சென்னை: சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில், ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம் நேற்று துவங்கியது. வரும் அக்., 3ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்துடன் கொண்டாடப்படுகிறது.
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் கிளையான சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம், தி.நகரில் அமைந்துள்ளது. இங்கு, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் பாரதி தீர்த்த மகா சன்னிதானம் மற்றும் விதுசேகர பாரதி சன்னிதானத்தின் ஆசியுடன், இந்த ஆண்டு ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம், நேற்று முதல் வரும் அக்., 3ம் தேதி வரை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று காலை, சாரதாம்பாள் மகா அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, ஜகத்குரு சந்திரசேகரேந்திர பாரதி மகாசுவாமிகள் ஆராதனை செய்யப்பட்டது.
நேற்று மாலை, சுவாமிக்கு ஜகத்பிரசுதிக அலங்காரம் செய்யப்பட்டது. பின், சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று அதிகாலை மகாதீபாராதனை, அஷ்டாவதான சேவை நடக்கிறது. பின், கணபதி ஹோம் நடத்தப்படுகிறது.
காலை 7:30 மணி முதல் சுவாசினி, கன்யா பூஜை நடக்கிறது. வரும் அக்., 1ம் தேதி சரஸ்வதி பூஜை, நவசண்டி ஹோமம், பூர்ணாஹுதி நடக்கிறது.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் முறையே, இன்று முதல் வரும் அக்., 3ம் தேதி வரை, முதல் ஹம்ச வாகனம், விருக் ஷ வாகனம், மயூர வாகனம், கருட வாகனம், இந்திராணி, மோஹினி, காமதேனு, வீணை சாரதா, சிம்ம வாகனம், கஜலட்சுமி, ராஜராஜேஸ்வரி, ஷாகாம்பரி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
நவராத்திரியின் போது, சப்தசதி பாராயணம், லட்சார்ச்சனை, வேதா பாராயணம், தம்பதி பூஜை நடத்தப்படுகிறது. தினசரி மாலை இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.