/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில பேட்மின்டன் வரும் 21ல் துவக்கம் மாநில பேட்மின்டன் வரும் 21ல் துவக்கம்
மாநில பேட்மின்டன் வரும் 21ல் துவக்கம்
மாநில பேட்மின்டன் வரும் 21ல் துவக்கம்
மாநில பேட்மின்டன் வரும் 21ல் துவக்கம்
ADDED : ஜூன் 13, 2025 12:19 AM
சென்னை, இருபாலருக்குமான மாநில பேட்மின்டன் போட்டி, சென்னையில் வரும் 21ல் துவங்குகிறது.
'டீம் - 16 ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில் தீ அல்டிமேட் பேட்மின்டன் ஷோ டவுன் எனும் மாநில பேட்மின்டன் போட்டி, சென்னை நீலாங்கரையிலுள்ள அன்லீச் பேட்மின்டன் மைதானத்தில், வரும் 21ல் துவங்கி இரண்டு நாள் நடக்கிறது.
போட்டியில், மாநிலத்தின் சிறந்த பேட்மின்டன் வீரர், வீராங்கனையர் தனி நபர் மற்றும் குழுவாக மோதுகின்றனர். தனிநபர் பிரிவில் யு - 11, 13, 15, 17 மற்றும் இரட்டையர் பிரிவில் யு - 15, 17 என, இரண்டு பிரிவாக போட்டி நடக்கிறது.
இந்த போட்டிக்கான முன்பதிவை, கிளப் துவங்கியுள்ளது. இதற்காக ஒரு நபருக்கு 700 ரூபாய் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டியிட 1,200 ரூபாயை, அந்த கிளப் வசூலிக்கிறது.
பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனையருக்கு பதக்கம், காசோலை மற்றும் கோப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.