ADDED : ஜன 29, 2024 01:41 AM

சென்னை:தேசம் நலம்பெற வேண்டி, பரத்வாஜ் சுவாமிகள், திருச்சியில் சிறப்பு பூஜை செய்தார்.
தேச நலனுக்காகவும், மக்களின் இதயங்களில் நல்லெண்ணம் தோன்றவும், பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள், திருச்சி அம்மா மண்டபம் சாலையில் உள்ள தன் இல்லத்தில், சிறப்பு பூஜைகள் செய்து, ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனை வழிபட்டார்.
இந்த பூஜையின் போது, கையில் யோக தண்டம் ஏந்தி, ரிக்வேத ஸ்வரத்துடன் துர்க்கை, காயத்ரி, பஞ்சதசீ, திரயம்பகம் உள்ளிட்ட மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன.