/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிங்கிள் காலம் 'சொமேட்டோ' ஊழியரை தாக்கியவர் கைது சிங்கிள் காலம் 'சொமேட்டோ' ஊழியரை தாக்கியவர் கைது
சிங்கிள் காலம் 'சொமேட்டோ' ஊழியரை தாக்கியவர் கைது
சிங்கிள் காலம் 'சொமேட்டோ' ஊழியரை தாக்கியவர் கைது
சிங்கிள் காலம் 'சொமேட்டோ' ஊழியரை தாக்கியவர் கைது
ADDED : மார் 19, 2025 12:11 AM
முகப்பேர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகுருசாமி சபரிநாத், 34. இவர், அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தபடி, 'சொமேட்டொ'வில் உணவு டெலிவரி ஊழியராக பணிபுரிகிறார்.
இந்நிலையில், ஜெகதீஷ் என்பவர் ஆர்டர் செய்த உணவை, டெலிவரி செய்ய முகப்பேர் கிழக்கு பகுதிக்கு, கடந்த 16ம் தேதி நள்ளிரவு சென்றுள்ளார். ஜெகதீஷை தொடர்புகொண்ட போது, அவரை வேறு இடத்திற்கு வருமாறு கூறி அலைக்கழித்துள்ளார். அங்கு சென்ற சபரிநாத், இது குறித்து ஜெகதீஷிடம் முறையிட்டுள்ளார்.
அப்போது, ஜெகதீஷ் உடன் இருந்த, முகப்பேர் மேற்கு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பிரபு, 25, என்பவர், சபரிநாத்தை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இது குறித்து விசாரித்த நொளம்பூர் போலீசார், பிரபுவை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.