ADDED : மார் 24, 2025 11:56 PM
அம்பத்துார்,
அம்பத்துார், வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்தவர் பாரத், 29; ஐ.டி., ஊழியர். அவரது மனைவி ஜெயசுதா, 25. தம்பதிக்கு இரண்டு மாதமான சாஸ்த்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில் குழந்தைக்கு பால் கொடுத்து துாங்க வைத்துள்ளார். காலை 6:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, குழந்தை மயங்கி கிடந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது. அம்பத்துார் போலீசார் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்க்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.