ADDED : மே 31, 2025 03:22 AM
சென்னை:கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமணி, 54. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார்.
தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கும் ரமணி, நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
நேரு பூங்கா பகுதி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்த ரமணி படுகாயமடைந்தார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டியை, அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் தேடி வருகின்றனர்.