/உள்ளூர் செய்திகள்/சென்னை/வீட்டின் பூட்டை உடைத்து எஸ்.ஐ., வீட்டில் கைவரிசைவீட்டின் பூட்டை உடைத்து எஸ்.ஐ., வீட்டில் கைவரிசை
வீட்டின் பூட்டை உடைத்து எஸ்.ஐ., வீட்டில் கைவரிசை
வீட்டின் பூட்டை உடைத்து எஸ்.ஐ., வீட்டில் கைவரிசை
வீட்டின் பூட்டை உடைத்து எஸ்.ஐ., வீட்டில் கைவரிசை
ADDED : பிப் 24, 2024 12:16 AM
கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காரணைபுதுச்சேரி ஊராட்சி அஷ்டலட்சுமி நகரில் வசிப்பவர் பிரபாகரன், 40; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சப் -- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், காரணைபுதுச்சேரியில் புதிதாக வீடு கட்டி, சமீபத்தில் கிரகப்பிரவேசம் செய்து விட்டு, ஊருக்கு சென்றார்.
புதிய வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பூஜை பொருட்கள் மற்றும் 1 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.
அதேபோல், அதன் அருகிலேயே உள்ள குமரேசன், 48, என்பவரின் வீடு உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவர், மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு, குடும்பத்துடன் கும்பகோணத்திற்கு சென்றுள்ளார்.
அந்த வீடும் பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்று, வீட்டில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இருவரும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து, திருடர்களை தேடி வருகின்றனர்.