/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அங்காடி கட்டுமான பணிகள் திருவொற்றியூரில் துவக்கம் அங்காடி கட்டுமான பணிகள் திருவொற்றியூரில் துவக்கம்
அங்காடி கட்டுமான பணிகள் திருவொற்றியூரில் துவக்கம்
அங்காடி கட்டுமான பணிகள் திருவொற்றியூரில் துவக்கம்
அங்காடி கட்டுமான பணிகள் திருவொற்றியூரில் துவக்கம்
ADDED : மே 30, 2025 12:33 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் தெருவில் காய்கறி, பழம் உள்ளிட்டவற்றின் சந்தை உள்ளது.
இதன் கட்டடம் பலவீனமாக இருந்ததால், 9.78 கோடி ரூபாய் செலவில், நவீன அங்காடி அமைக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்து, வியாபாரிகளிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கடைகளை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் கட்டப்படும் சந்தைக்கான பணியை, வீடியோ 'கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.