Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கழிவுநீர் குழாய் பதிப்பு பணி வேளச்சேரியில் மீண்டும் துவக்கம் 12 ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு

கழிவுநீர் குழாய் பதிப்பு பணி வேளச்சேரியில் மீண்டும் துவக்கம் 12 ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு

கழிவுநீர் குழாய் பதிப்பு பணி வேளச்சேரியில் மீண்டும் துவக்கம் 12 ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு

கழிவுநீர் குழாய் பதிப்பு பணி வேளச்சேரியில் மீண்டும் துவக்கம் 12 ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு

ADDED : செப் 01, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
வேளச்சேரி:வேளச்சேரியில், 102 மீட்டர் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி, 12 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, மீண்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது.

அடையாறு மண்டலம், 172, 175, 176, 177 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதியை உள்ளடக்கியது. இதில், 172, 175 ஆகிய வார்டுகளில் சேரும் கழிவுநீர், நேராக பெருங்குடி செல்கிறது.

ஆனால், 176, 177 ஆகிய வார்டுகளில் சேரும் கழிவுநீர், விஜயநகர், எல்.ஐ.சி., காலனியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து, ஓ.எம்.ஆர்., - எஸ்.ஆர்.பி., டூல்ஸ் உந்து நிலையம் வழியாக, 11 கி.மீ., பயணித்து பெருங்குடி செல்கிறது.

இதனால், 2013ம் ஆண்டு, வேளச்சேரியில் இருந்து நேராக, 4 கி.மீ., துாரத்தில் பெருங்குடி செல்லும் வகையில், 1,000 எம்.எம்., குழாய் பதிக்கும் பணி துவங்கியது. இந்த பணியை, எஸ்.இ.டபிள்யூ., என்ற நிறுவனம் செய்தது.

நிர்வாக குளறுபடியால், 2020ம் ஆண்டு அந்நிறுவனம், 600 மீட்டர் குழாய் பதிக்கும் பணியை நிறுத்தி வெளியேறியது. தொடர்ந்து, 2021ம் ஆண்டு, வி.வி.வி., என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளில், 498 மீட்டர் துாரம் குழாய் பதிக்கப்பட்டது. ஆனால், பழைய நிறுவனம் போல், இந்த நிறுவனமும் பணியை பாதியில் நிறுத்தியது.

இரண்டு ஆண்டுகளில் முடிய வேண்டிய பணி, 12 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாமல் நீண்டதால், வேளச்சேரியில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, மீதமுள்ள பணியை வி.வி.வி., நிறுவனம் நேற்று துவங்கியது. பருவ மழைக்காக சாலையை துண்டிக்க அனுமதி மறுக்கப்படும் சூழல் உள்ளதால், அதற்கு முன் பணியை முடிக்க வேண்டும் என, குடிநீர் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

மூன்று இரவுகளில் பணி செய்து, 102 மீட்டருக்கு குழாய் பதித்து முடிக்கப்படும் என, ஒப்பந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இப்பணி முடிந்தால், பருவமழையின் போது வேளச்சேரியில் கழிவுநீர் பாதிப்பு ஏற்படாது என, அதிகாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us