/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாணம் கொட்டி கால்வாய் அடைப்பு வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் சாணம் கொட்டி கால்வாய் அடைப்பு வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
சாணம் கொட்டி கால்வாய் அடைப்பு வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
சாணம் கொட்டி கால்வாய் அடைப்பு வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
சாணம் கொட்டி கால்வாய் அடைப்பு வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
ADDED : மே 26, 2025 03:15 AM

பள்ளிக்கரணை:பெருங்குடி மண்டலம், வார்டு 189க்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் மழைநீர் மூடுகால்வாய் பணி துவங்கி பல மாதங்களாகியும், பல்வேறு பகுதிகளில் வடிகால்வாய் இணைக்கப்படாமல் உள்ளது.
இதில், முக்கிய சாலையான வேளச்சேரி - தாம்பரம் சாலையில், பள்ளிக்கரணை - நாராயணபுரம் வரை நான்கு இடங்களில், கால்வாய் இணைப்பு பகுதிகள் மூடாமல் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
மாட்டு சாணம் கொட்டுவதாலும், மண் அடைத்துள்ளதாலும், கால்வாய் இருப்பதே தெரியாத அளவிற்கு, சாலை போலவே காணப்படுகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கால்வாயில் சாணம் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
தவிர, மண்ணை அகற்றி, இணைப்பு கால்வாய் பணியை முடிக்க வேண்டும் என, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.