/உள்ளூர் செய்திகள்/சென்னை/கோயம்பேடில் தொடர் கைவரிசை 'பலே' திருடன் சிக்கினான்கோயம்பேடில் தொடர் கைவரிசை 'பலே' திருடன் சிக்கினான்
கோயம்பேடில் தொடர் கைவரிசை 'பலே' திருடன் சிக்கினான்
கோயம்பேடில் தொடர் கைவரிசை 'பலே' திருடன் சிக்கினான்
கோயம்பேடில் தொடர் கைவரிசை 'பலே' திருடன் சிக்கினான்
ADDED : ஜன 31, 2024 12:26 AM
கோயம்பேடு, நெற்குன்றம் கோதண்டராமர் தெருவைச் சேர்ந்த சுதன்குமார், 28, கோயம்பேடு பூ சந்தையில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு சந்தைக்கு சென்றார்.
இதை நோட்டமிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர், அவரது வீட்டில் இருந்த, 2 சவரன் நகை மற்றும் 27,000 ரூபாயை திருடி சென்றார்.
இதுகுறித்த புகாரையடுத்து, கோயம்பேடு போலீசார், நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ், 41, என்பவரை கைது செய்தனர். தொடர் விசாரணையில், நெற்குன்றம் பகுதியில் வசிக்கும் பலர், கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வருவதால், அதிகாலையில் எழுந்து செல்வது வழக்கம்.
அப்போது, திறந்திருக்கும் வீடுகளில் புகுந்து பணம், நகை திருடுவதும், தனியாக உள்ள பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை அளிப்பதும் தெரியவந்தது. இவர் மீது கோயம்பேடு, மதுரவாயல், போரூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.