/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரிக்கெட் வீராங்கனையருக்கு 27, 28ல் தேர்வு போட்டிகள் கிரிக்கெட் வீராங்கனையருக்கு 27, 28ல் தேர்வு போட்டிகள்
கிரிக்கெட் வீராங்கனையருக்கு 27, 28ல் தேர்வு போட்டிகள்
கிரிக்கெட் வீராங்கனையருக்கு 27, 28ல் தேர்வு போட்டிகள்
கிரிக்கெட் வீராங்கனையருக்கு 27, 28ல் தேர்வு போட்டிகள்
ADDED : ஜூன் 18, 2025 12:19 AM
சென்னை, டி.என்.சி.ஏ.,வின் ஓபன் தேர்வில் பங்கேற்க, 23 வயது மற்றும் சீனியர் கிரிக்கெட் வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 23 வயதுக்கு உட்பட பெண்கள் மற்றும் சீனியர் பெண்களுக்கான ஓபன் தேர்வு, இம்மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்வு போட்டிகள், சேப்பாக்கம், எம்.ஏ.சி., கிரிக்கெட் மைதானத்தில் நடக்கின்றன.
இதில், 2002 செப்., 1ம் தேதிக்கு முன் அல்லது, 2013 ஆக., 31ம் தேதிக்குள் பிறந்த, 23 வயது பெண்கள் பங்கேற்கலாம். அதேபோல், சீனியர் பிரிவில், 2002 ஆக., 31ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.
பங்கேற்க விருப்பமுள்ளோர், இம்மாதம் 23ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். தேர்வு தொடர்பான விபரங்களுக்கு, www.tnca.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.