/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி போக்சோவில் கைது சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி போக்சோவில் கைது
சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி போக்சோவில் கைது
சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி போக்சோவில் கைது
சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி போக்சோவில் கைது
ADDED : மே 25, 2025 08:24 PM
சென்னை:அபிராமபுரம் மகளிர் காவல் நிலையத்தில், 5 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்:
வணிக வளாகம் ஒன்றில் துப்புரவு பணிகளை செய்து வருகிறேன்.அதே வளாகத்தில் காவலாளியாக உள்ள குமார், 55 என்பவர், என் 5 வயது மகளை விளையாட மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின், அவரது மொபைல்போனில் ஆபாச வீடியோவை காண்பித்து, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, யாரிடமும் சொல்லக்கூடாது; பள்ளியில் இதுபோன்று யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலாளி குமாரை கைது செய்தனர்.