ADDED : மே 17, 2025 12:18 AM
கொடுங்கையூர்,
எருக்கஞ்சேரி, குமரன் தெருவைச் சேர்ந்தவர் அபீப், 33; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 14ம் தேதி இரவு, தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரை, வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, ஸ்கூட்டர் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர்.
கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்த ஷாம்குமார், 21, கரண், 22, ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, ஸ்கூட்டரை மீட்டனர். ஷாம்குமார் மீது நான்கு வழக்குகளும், கரண் மீது ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது.