/உள்ளூர் செய்திகள்/சென்னை/கரடு முரடான சாலையால் பள்ளி மாணவர்கள் அவதிகரடு முரடான சாலையால் பள்ளி மாணவர்கள் அவதி
கரடு முரடான சாலையால் பள்ளி மாணவர்கள் அவதி
கரடு முரடான சாலையால் பள்ளி மாணவர்கள் அவதி
கரடு முரடான சாலையால் பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : பிப் 06, 2024 12:52 AM
நன்மங்கலம், பரங்கிமலை ஒன்றியம், நன்மங்கலம் ஊராட்சி, நேரு நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகளும், ஒரு தனியார் பள்ளியும் உள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த இத்தெருவில், 10 ஆண்டுகளாக சாலை புதுப்பிக்கப்படவில்லை.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கரடு முரடான சாலையில் பள்ளி மாணவர்கள், பெற்றோர், பகுதி மக்கள் பயணித்து, கடும் அவதியைச் சந்திக்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கவிழ்ந்து, விபத்துக்குள்ளாவதும் தொடர்கிறது.
இங்கு, புதிய சாலை அமைத்துத் தர கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் 10 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, சாலையை புதுப்பித்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.