/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண்ணை வழிமறித்து தாக்கிய பள்ளி கால தோழன் கைது பெண்ணை வழிமறித்து தாக்கிய பள்ளி கால தோழன் கைது
பெண்ணை வழிமறித்து தாக்கிய பள்ளி கால தோழன் கைது
பெண்ணை வழிமறித்து தாக்கிய பள்ளி கால தோழன் கைது
பெண்ணை வழிமறித்து தாக்கிய பள்ளி கால தோழன் கைது
ADDED : மே 13, 2025 12:49 AM

மதுரவாயல் :மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கலா, 48. இவரது கணவர் இறந்ததுடன், மகளுக்கு திருமணமான நிலையில், தனியாக வசித்து வருகிறார்.
கடந்த 10ம் தேதி, மதுரவாயல், கங்கையம்மன் கோவில் தெரு வழியாக, தன் மகளுடன் நடந்து சென்றார். அப்போது, அவர்களுக்கு பழக்கமான அடையாளம்பட்டு, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன், 48, என்பவர் கலாவை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார்.
மேலும், உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்து, அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து, தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்தனர்.
விசாரணையில், கலா மற்றும் முருகன் ஒன்றாக பள்ளியில் படித்துள்ளனர். கடந்த ஜன., 16ம் தேதி, கலாவை தாக்கி பணம் மற்றும் நகையை, முருகன் பறித்து சென்றுள்ளார். இந்த வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தவர், மீண்டும் நகை பணத்திற்காக கலாவை தாக்கியது தெரியவந்தது.