/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இரவிலும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ., வங்கி எஸ்.ஐ., ரோந்தால் நகை, பணம் தப்பியது இரவிலும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ., வங்கி எஸ்.ஐ., ரோந்தால் நகை, பணம் தப்பியது
இரவிலும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ., வங்கி எஸ்.ஐ., ரோந்தால் நகை, பணம் தப்பியது
இரவிலும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ., வங்கி எஸ்.ஐ., ரோந்தால் நகை, பணம் தப்பியது
இரவிலும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ., வங்கி எஸ்.ஐ., ரோந்தால் நகை, பணம் தப்பியது
ADDED : ஜூன் 05, 2025 12:27 AM

ஆவடி, ஊழியர்கள் அலட்சியத்தால், ஆவடியில் எஸ்.பி.ஐ., வங்கி கிளை கதவு பூட்டப்படாமல், இரவிலும் திறந்தே கிடந்தது. போலீஸ் ரோந்து சென்றதால், வங்கியிலிருந்த பணம், நகைகள் தப்பின.
ஆவடி குற்றப்பிரிவு எஸ்.ஐ., சிவக்குமார், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில், ஆவடி சி.டி.எச்., சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, ஆவடி செக்போஸ்ட் அருகே உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் மரக்கதவு, கிரில் கேட் பூட்டாமல் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார், வங்கி மேலாளர் பூபாலனுக்கு தகவல் கொடுத்தார்.
பதறியடித்து வந்த மேலாளர் பூபாலன், ஊழியர் சுரேந்தர் ஆகியோர் வங்கிக்கு வந்து ஆய்வு செய்தபோது, திருட்டு போன்ற அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்பது தெரிந்தது.
விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாக, வங்கி கதவை பூட்டாமல் சென்றது தெரிய வந்தது.
வங்கியில் 3,000த்துக்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர். சம்பவ நாளில் வங்கியில், 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்ததாக கூறப்படுகிறது.
வங்கி பூட்டாமல் இருந்ததை, ரோந்து சென்ற எஸ்.ஐ., கவனித்ததால், அதிர்ஷ்டவசமாக வங்கியில் இருந்த பணம், நகை திருடு போகாமல் தப்பின.
சிறப்பாக செயல்பட்ட எஸ்.ஐ., சிவகுமாரை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.