/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு சத்தியவாணிமுத்து நகர் மக்கள் புகார் உர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு சத்தியவாணிமுத்து நகர் மக்கள் புகார்
உர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு சத்தியவாணிமுத்து நகர் மக்கள் புகார்
உர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு சத்தியவாணிமுத்து நகர் மக்கள் புகார்
உர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு சத்தியவாணிமுத்து நகர் மக்கள் புகார்
ADDED : ஜூன் 13, 2025 09:08 PM
எண்ணுார்:உர தொழிற்சாலையால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக, ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எண்ணுார் சத்தியவாணி முத்து நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணுார், சத்தியவாணி முத்து நகர், 19 தெருக்களில், 5,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகள் அருகே, கோரமண்டல் உர தொழிற்சாலை மற்றும் உரம் பேக்கிங் செய்யக் கூடிய கோத்தாரி நிறுவனமும் செயல்படுகிறது.
கோத்தாரி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நச்சு புகையால், சுற்றுவட்டார குடியிருப்புகளில், கருப்பு துகள் படிந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக, அப்பகுதிவாசிகள், ஜூன் 1ல், புகைப்பட ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டனர்.
இந்த குற்றச்சாட்டை கோரமண்டல் ஆலை நிர்வாகம் மறுத்தது.
இதற்கிடையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சத்தியவாணி முத்து நகர் பகுதியில், காற்று தரம் அளவிடும் கருவிகளை வைத்து, ஆய்வு செய்ய முயன்றனர். ஆலை செயல்படாதபோத ஆய்வு செய்து என்ன பயன் என, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிததால், அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில், ஜூன் மாதம் துவக்கத்தில் ஏற்பட்ட, கருப்பு துகள்களின் மாதிரிகளை சேகரித்து, சைதாபேட்டையில் உள்ள, சி.வி.ஆர்., லேப் அண்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், ஆய்வு செய்துள்ளனர்.
அதில், உரத் தொழிற்சாலையின் துாசி ஆபத்தான அளவை மீறியுள்ளது என்று முடிவுகள் வந்திருப்பதாகவும், எனவே, மாசுகட்டுபாட்டு வாரியம் கவனித்து, அந்த நிறுவன செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும்.
சுவாச பிரச்னையால் பாதிக்கப்படும், சத்தியவாணி முத்துநகர் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.