ADDED : பிப் 24, 2024 12:06 AM
எழும்பூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எழும்பூரில் துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று, தமிழ்நாடு துாய்மை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி வலியுறுத்தினர்.
பெண் துாய்மை பணியாளர்கள் பலர் சீருடை, அடையாள அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.