/உள்ளூர் செய்திகள்/சென்னை/வாலிபருக்கு கத்திக்குத்து ‛'சமோசா' வியாபாரி கைதுவாலிபருக்கு கத்திக்குத்து ‛'சமோசா' வியாபாரி கைது
வாலிபருக்கு கத்திக்குத்து ‛'சமோசா' வியாபாரி கைது
வாலிபருக்கு கத்திக்குத்து ‛'சமோசா' வியாபாரி கைது
வாலிபருக்கு கத்திக்குத்து ‛'சமோசா' வியாபாரி கைது
ADDED : ஜன 04, 2024 12:30 AM
அம்பத்துார்ஆவடி அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் ஆகாஷ், 21; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, கொரட்டூர் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன், 29, என்பவர், நடைமேடையில் சமோசா விற்றார். ஆகாஷ், 10 ரூபாய்க்கு சமோசா வாங்கினார். அவை கெட்டு போயிருந்ததால், பணத்தை திரும்ப கேட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணதாசன், சிறிய கத்தியால், ஆகாஷின் மார்பில் குத்தி தப்பிச்சென்றார். அங்கிருந்தோர் ஆகாஷை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பெரம்பூர் ரயில்வே போலீசார், கண்ணதாசனை நேற்று கைது செய்தனர்.