Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சைதாப்பேட்டை அம்மா பூங்கா ரூ.3.6 கோடியில் சீரமைப்பு

சைதாப்பேட்டை அம்மா பூங்கா ரூ.3.6 கோடியில் சீரமைப்பு

சைதாப்பேட்டை அம்மா பூங்கா ரூ.3.6 கோடியில் சீரமைப்பு

சைதாப்பேட்டை அம்மா பூங்கா ரூ.3.6 கோடியில் சீரமைப்பு

ADDED : ஜூன் 17, 2025 11:58 PM


Google News
சைதாப்பேட்டை சைதாப்பேட்டை அம்மா பூங்காவை, 3.6 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சி.எம்.டி.ஏ., முதற்கட்டமாக கழிப்பறைகள் அமைக்கும் பணிகளை துவங்கியுள்ளது.

கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டு சைதாப்பேட்டை - கோடம்பாக்கம் சாலையில், 2016ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், மேயர் சைதை துரைசாமி நிதியில் கட்டப்பட்ட அம்மா பூங்கா அமைந்துள்ளது.

இந்த பூங்காவில், யோகா மையம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, வாகன நிறுத்தம், உடற்பயிற்சி கூடம், பசுமை பகுதி உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்த பூங்காவை, 3.6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.

நவீன விளையாட்டு மைதான உபகரணங்கள், யோகா மற்றும் ஸ்கேட்டிங் மையம் ஆகியவை புதுப்பித்தல், செயற்கை நீரூற்று, பூங்காவின் முகப்பு வடிவம் மாற்றி அமைத்தல், கழிப்பறை வசதி ஆகியவை அமைய உள்ளன.

இந்த பூங்காவை மூடாமல், பல கட்டமாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, பூங்காவில் கழிப்பறைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

முடிந்த அளவிற்கு, பூங்காவை மூடாமல் பூங்காவில் ஓரமாக உள்ள யோகா, ஸ்கேட்டிங் மையம் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.

அதன்பின், பூங்கா மூடப்பட்டு, முழுவீச்சில் பணிகள் துவங்கப்படும். தற்போது, பூங்காவில் ஆறு இருக்கைகள், கழிப்பறை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us