/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ. 54 லட்சம் செலவில் கழிப்பறை ; குளியலறைரூ. 54 லட்சம் செலவில் கழிப்பறை ; குளியலறை
ரூ. 54 லட்சம் செலவில் கழிப்பறை ; குளியலறை
ரூ. 54 லட்சம் செலவில் கழிப்பறை ; குளியலறை
ரூ. 54 லட்சம் செலவில் கழிப்பறை ; குளியலறை
ADDED : ஜன 05, 2024 12:24 AM
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையில், 54 லட்ச ரூபாய் செலவில், குளியலறை, கழிப்பறை மற்றும் நிழற்குடை அமைப்பதற்கு, எம்.எல்.ஏ., எபினேசர் அடிக்கல் நாட்டினார்.
தண்டையார்பேட்டை, பரமேஸ்வரன் நகரில், ஆர்.கே., நகர் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 30 லட்ச ரூபாய் செலவில், கழிப்பறை மற்றும் குளியலறை கட்டும் பணிகள் துவங்கின.
அதே போல், 38 வது கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து, 24 லட்ச ரூபாய் செலவில், இரண்டு நவீன நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
இவ்விரு பணிகளுக்கான, அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை நடைபெற்றது. இதில், எம்.எல்.ஏ., எபினேசர் பங்கேற்று, பணிகளுக்கான, பூமி பூஜை போட்டு, பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், ஆர்.கே நகர் மேற்கு பகுதி செயலர் ஜெபதாஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.