/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.46 லட்சம் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை ரூ.46 லட்சம் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
ரூ.46 லட்சம் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
ரூ.46 லட்சம் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
ரூ.46 லட்சம் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : செப் 24, 2025 03:22 AM
கோயம்பேடு, பைக்கில் வந்த நபரை தாக்கி 45.68 லட்சம் ரூபாய் பறித்து சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நெற்குன்றம் ஜெயலட்சுமி நகரை சேரந்த்வர் சாந்த குமார், 42. இவர் கோயம்பேடு சந்தையில் மொத்தமாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர், சிறு வியாபாரிகளுக்கு காய்கறி விற்பனை செய்த பணத்தை கலெக்சன் செய்யும் பணியை விருகம்பாக்கம் சின்மையா நகரை சேர்ந்த நாராயணன், 35 என்பவர் செய்து வருகிறார்.
கடந்த 22ம் தேதி நாராயணன் பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடிக்கு சென்று வாசிம் என்பவரிடம் இருந்து கலெக்சன் செய்த, 45 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயுடன், இரவு 'ஹோண்டா சைன்' பைக்கில் கோயம்பேட்டிற்கு திரும்பி சென்றார்.
நெற்குன்றம் எலும்பு கம்பனி அருகே சென்ற போது, 'சுசூகி ஜிக்ஸர்' பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், நாராயணன் பைக்கில் மோதினர்.
இதில், நாராயணன் தடுமாறி கீழே விழுந்த நிலையில், அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி, பணத்தை பறித்து சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் அவரை துரத்தி சென்றதில், அவர்கள் பைக்கை விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து நாராயணன் நேற்று கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், மர்ம நபர்கள் விட்டு சென்ற பைக்கை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.