/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.3 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல் ரூ.3 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ரூ.3 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ரூ.3 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ரூ.3 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : செப் 14, 2025 03:15 AM
சென்னை:தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ கஞ்சாவை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த வடமாநிலங்களைச் சேர்ந்த இரு வாலிபர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்று திரும்பியதாக அவர்கள் கூறினர்.
இதையடுத்து, அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது, மூன்று கிலோ உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு மூன்று கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இரு வாலிபர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.