/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.12 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல் ரூ.12 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ரூ.12 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ரூ.12 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ரூ.12 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : செப் 21, 2025 12:40 AM

சென்னை, :தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு 'தாய் ஏர்வேஸ்' பயணியர் விமானம், நேற்று வந்தது.
இதில் வந்த, வட மாநிலத்தைச் சேர்ந்த, 30 வயது இளம்பெண் மற்றும் 28 வயது வாலிபர் ஆகிய இருவரையும், சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். விசாரணையில், சுற்றுலா பயணியராக தாய்லாந்து நாட்டிற்கு சென்று திரும்பியது தெரிந்தது.
அவர்களது உடைமைகளில், 'ஹைட்ரோபோனிக்' உயர்ரக கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 12 கிலோ கஞ்சாவை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 12 கோடி ரூபாய். இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரூ.5 லட்சம் கஞ்சா அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே, கஞ்சா விற்பனை நடந்தது. அதில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சித் டிபர்மா, 22, சோயல் ராணா, 22 மற்றும் பிரசன்னா தாஸ், 19, ஆகியோரை அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 4.50 லட்சம் மதிப்பிலான, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதுமட்டுமல்லாமல், அம்பத்துார் அடுத்த சண்முகபுரம் பகுதியில், வாகன தணிக்கையின்போது, பைக்கில் வந்த இருவரை பிடித்து புதுார் போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், திருமுல்லைவாயலைச் சேர்ந்த விஜயகுமார், 25 மற்றும் நரேஷ் குமார், 24 என தெரிந்தது. இருவரிடம் இருந்து, 50,000 மதிப்புள்ள, 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.