/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூதாட்டியை தாக்கி வீட்டை சூறையாடிய ரவுடிகள் கைது மூதாட்டியை தாக்கி வீட்டை சூறையாடிய ரவுடிகள் கைது
மூதாட்டியை தாக்கி வீட்டை சூறையாடிய ரவுடிகள் கைது
மூதாட்டியை தாக்கி வீட்டை சூறையாடிய ரவுடிகள் கைது
மூதாட்டியை தாக்கி வீட்டை சூறையாடிய ரவுடிகள் கைது
ADDED : செப் 22, 2025 03:24 AM

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் மூதாட்டியை தாக்கி, அவரது மகளின் வீட்டை சூறையாடிய ரவுடிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கண்ணியம்மாள், 79. இம்மாதம் 15ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், மூதாட்டியிடம் அவரது பேரன் மணி குறித்து விசாரித்தனர். பேரன் தர வேண்டிய 12,000 ரூபாயை கேட்டு மூதாட்டியை மிரட்டி, அவரிடமிருந்த 2,000 ரூபாயை பறித்து சென்றனர்.
பின், மூதாட்டியின் மகள் வீட்டின் பூட்டை உடைத்து சூறையாடினர். அலுமினிய ஏணியை திருடிச்சென்றனர். இச்சம்பவம் குறித்து, கண்ணியம்மாள், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடிகள் முகேஷ், 26, சூர்யா, 18, ஆகியோர் மூதாட்டியை தாக்கியும், அவரது மகளின் வீட்டை சூறையாடியதும் தெரியவந்தது.
இவர்கள் மீது ஏற்கனவே அடிதடி, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடம், அரிவாள்மனை மற்றும் அலுமினிய ஏணி, மொபைல் போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.