/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழையால் சேறும் சகதியுமான சாலைகள் கொத்தவால்சாவடி வியாபாரிகள் அவதி மழையால் சேறும் சகதியுமான சாலைகள் கொத்தவால்சாவடி வியாபாரிகள் அவதி
மழையால் சேறும் சகதியுமான சாலைகள் கொத்தவால்சாவடி வியாபாரிகள் அவதி
மழையால் சேறும் சகதியுமான சாலைகள் கொத்தவால்சாவடி வியாபாரிகள் அவதி
மழையால் சேறும் சகதியுமான சாலைகள் கொத்தவால்சாவடி வியாபாரிகள் அவதி
ADDED : மே 21, 2025 12:30 AM

கொத்தவால்சாவடிகொத்தவால்சாவடியில், தாதா முத்தியப்பன் சாலை, ஆச்சாரப்பன் சாலை, ஆதியப்பன் சாலை, கோவிந்தப்பன் சாலை, அண்ணா பிள்ளை தெரு, வரதா முத்தியப்பன் சாலை உள்ளிட்ட சாலைகளில், காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட 1,000த்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள் உள்ளன.
இங்கு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
கடைகளுக்கு பொருள்கள் ஏற்றி வரும் லாரிகள், கட்டை வண்டிகள், மீன்பாடி வண்டிகள், குட்டியானை வாகனங்களில், கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில், முறையாக துாய்மை பணி மேற்கொள்ளாததால், சிறு மழைக்கே சேறும், சகதியுமாக மாறி, அப்பகுதி சுகாதார சீர்கேடில் சிக்கி உள்ளது.
வியாபாரிகள், பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.