/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெள்ள பாதிப்பு சர்வதேச பிரச்னை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு வெள்ள பாதிப்பு சர்வதேச பிரச்னை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு
வெள்ள பாதிப்பு சர்வதேச பிரச்னை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு
வெள்ள பாதிப்பு சர்வதேச பிரச்னை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு
வெள்ள பாதிப்பு சர்வதேச பிரச்னை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு
ADDED : ஜூன் 29, 2025 12:19 AM

சென்னை, ''சென்னையில் மட்டும் வெள்ளம் வருவதில்லை. இது சர்வதேச அளவிலான பிரச்னை,'' என, ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., திருப்புகழ் தெரிவித்தார்.
இந்திய அலுவலர்கள் சங்கம் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சங்க கட்டடத்தில் நேற்று, சிறப்பு கூட்டம் நடந்தது. சங்க செயற்குழு உறுப்பினர் முரளி வரவேற்றார். துணைத் தலைவர் ரத்னசபாபதி, பொதுச் செயலர் மூர்த்தி ஆகியோர், வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், சென்னை சி.யு.ஆர்.ஐ., மருத்துவமனை நுரையீரல் நிபுணர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது:
வாழ்க்கை முறையை ஒழுங்காக செயல்படுத்தினால், அதை அழகாக அனுபவிக்கலாம். உடலை நன்கு கவனிக்க வேண்டும். தோள்பட்டை, கழுத்து, தலை, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் வலி வந்தால், மாரடைப்பு அறிகுறியாக இருக்கலாம்.
அதேபோல், தலைசுற்றல், கண் பார்வை குறைபாடு, முகத்தில் வலி மற்றும் கையில் நடுக்கம் ஏற்பட்டால், பக்கவாதம் அறிகுறியாக இருக்கலாம். இது போன்ற அறிகுறிகளின்போது, சுய மருத்துவம் பார்க்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் பேசியதாவது:
நகரமயமாக்கலால், வெப்பம் அதிகரிக்கிறது. இதனால், தண்ணீர் நீராவியாகி மழை அதிகரிக்கிறது. அதிகளவு மழை பெய்யும்போது, வெள்ளம் வருகிறது. சென்னையில் மட்டும் தான் வெள்ளம் பிரச்னை இருப்பதாக நினைக்கின்றனர். இந்த பிரச்னை சர்வதேச அளவில் உள்ளது.
நகரமயமாக்கல் பகுதிகளில் உள்ள, பொதுவான பிரச்னை இது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதனால், நீர்நிலைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நீரை சேகரிக்க வேண்டும்.
வானிலை ஆய்வு மையம் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவற்றை 4 அல்லது 5 கி.மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.