/உள்ளூர் செய்திகள்/சென்னை/6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பொள்ளாச்சி நபருக்கு௹ காப்பு6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பொள்ளாச்சி நபருக்கு௹ காப்பு
6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பொள்ளாச்சி நபருக்கு௹ காப்பு
6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பொள்ளாச்சி நபருக்கு௹ காப்பு
6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பொள்ளாச்சி நபருக்கு௹ காப்பு
ADDED : பிப் 24, 2024 11:57 PM

அண்ணா நகர், ஒடிசா மாநிலத்தில் இருந்து, பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மாறுவேடத்தில் கண்காணித்தனர். பார்சலுடன் வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது, கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரகாஷ், 25, என்பது தெரியவந்தது.
இவருக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. குடும்பம் நடத்த பணம் இல்லாததால் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா கடத்தி விற்றது தெரிய வந்தது.
அவரிடமிருந்து, 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.